டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது பிரியங்கா காந்தி […]
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் 7 மணி முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பொது வெற்றி கணிப்பு ஓர் அளவுக்கு கணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இரட்டை வெற்றியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆம், பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி […]
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபர் அலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியிலிருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது அதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். அதேநேரம், […]
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அங்கு டெபாசிட் பெற 1,58,741 வாக்குகள் பெறவேண்டும். இந்த நிலையில், அவர் 3,34,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் இருக்கிறார். இதனால் அங்கு இவரின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதுவே அவர் போட்டியிடும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ, பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதன்படி, சிபிஐ-யின் சத்யன் மோக்கேரி 1.40 லட்சம் […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் முதல் முதலாக தேர்தல் அரசியலில் களம் காண்கிறார். அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். வயநாட்டிடல் 62.92% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் […]
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. அதே போல 2 மாநிலத்தில் 2 மக்களவை தொகுதி இடைத்தேர்தல், 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. 2 மாநில சட்டப்பேரவை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு […]
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார், அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14.71 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வயநாடு தொகுதியில் இன்று ( நவம்பர் 13) காலையில் வாக்குப்பதிவு […]
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அவர் தற்போது உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதன் முறையாக தேர்தல் வாக்கு அரசியலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, […]
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக […]
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது […]
வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதே போல உ.பி ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த […]
கேரளா : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் […]
டெல்லி : முன்னதாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்களை அடுத்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்க்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தேர்தல் விவரங்கள் : மொத்த தொகுதிகள் : 81. மொத்த வாக்காளர்கள் – 2.6 கோடி. முதற்கட்ட தேர்தல் (43 தொகுதிகள்) : வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 18.10.2024. வேட்புமனு நிறைவு – 25.10.2023. வேட்புமனு வாபஸ் […]
சென்னை : தமிழக மலைப்பகுதிகளில் இடர்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று மேப்பாடி, சூரல் மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. ஒரே நாளில் பெய்த அதிகப்படியான கனமழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு என கேரள […]
திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த உறவுகளை இழந்து, வீடு உடைமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை […]
திருவனந்தபுரம் : வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி. கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் […]
வயநாடு : கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கின. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வருகை : இன்னும் பல்வேறு பகுதிகளில் மீட்புப்படையினர் , இந்திய ராணுவம் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவு […]
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மீட்பு படையினர், இந்திய ராணுவம், மாநில மீட்புப்படையினர் ஆகியோரும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில மீட்பு படையினரும் இன்னும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணில் […]