கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு..! விசாரணை குழு அமைப்பு...!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்த விவகாரத்தில், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு.

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்த விவகாரத்தில், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் சில குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் விசாரணை குழுஅமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.