தமிழகத்தில் 120 புதிய உழவர் சந்தைகள் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

Agriculture Minister MRK Panneerselvam has said that 120 new farmers' markets will be opened.

புதிதாக 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழகத்தில் கூடுதலாக 120 உழவர் சந்தைகள் கொண்டு வரப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் தமிழகத்தில் 24 செம்மொழி பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், செம்மொழி பூங்கா மற்றும் உழவர் சந்தைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என உறுதியளித்திருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி மீண்டும் உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டப்படும் என்றும் இன்னும் புதிதாக பல இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுத்தப்படும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தது.