ட்விட்டரின் நீலக்குறியீடு எப்போது கிடைக்கும்! எலான் மஸ்கின் பதில்.!

ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக ட்விட்டரின் நீலக்குறியீடு அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது, ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரின் வருமானத்தை கணக்கிட்டு, மாதம் $8 செலுத்தி யார் வேண்டுமானாலும் இந்த நீலக்குறியீடைப்பெறலாம் என அறிவித்திருந்தார்.

ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் மாதம் $8 செலுத்தி நீலக்குறியீடு பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அடுத்து ட்விட்டரின் தலைவர் எலான் மஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை மாதம் $8 செலுத்தி நீலக்குறியீடு பெரும் சந்தாதாரர் முறையை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்ததாக பல பயனர்கள் தங்களின் நீலக்குறியீடு மறைந்து விட்டது என கூறியிருந்தனர்.

இதனையடுத்து ட்விட்டரில், பயனர் ஒருவர் எப்போது ட்விட்டரின் நீலக்குறியீடு வரும் எனக் கேட்ட கேள்விக்கு எலான் மஸ்க், அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்ப வந்துவிடலாம் என பதிலளித்திருக்கிறார்.

unknown node