#Whatsapp Down: நள்ளிரவில் முடங்கிய வாட்ஸ்ஆப்.. புகாரளித்த பயனர்கள்!

உலகளவில் பல நாடுகளில் வாட்ஸ் ஆப்-ல் செய்திகள், புகைப்படங்கள், உள்ளிட்டவை அனுப்ப முடியவில்லை என பயனர்கள் புகாரளித்து வந்தனர்.

உலகளவில் பல நாடுகளில் வாட்ஸ் ஆப்-ல் செய்திகள், புகைப்படங்கள், உள்ளிட்டவை அனுப்ப முடியவில்லை என பயனர்கள் புகாரளித்து வந்தனர்.

உலகளவில் 2 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணி முதல் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் வாட்ஸ் ஆப்-ன் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களால் வாட்ஸ் ஆப்-ல் குறுந்செய்திகள், ஸ்டிக்கர்ஸ், புகைப்படங்கள், அனுப்பமுடியவில்லை. மேலும் சில பயணங்களால் வாட்ஸ் ஆப்பை ஓபன் கூட செய்ய முடியவில்லை எனவும் குற்றம் சாற்றி வந்தனர்.

unknown node

இதன்காரணமாக, பயனர்கள் ட்விட்டரில் #Whatsappdown என்ற ஹஷ்டாகில் தங்களின் புகார்களை தெரிவித்து வந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு, மீண்டும் வாட்ஸ் ஆப் சரியாக இயங்க தொடங்கியது. மேலும், இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் சரியான விளக்கத்தை தரவில்லை.