ஈரான் தலைநகரில் தண்ணீர் பற்றாக்குறை : "இதே நிலை நீடித்தால்".. மக்கள் கண்ணீர்!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tehran water shortage

ஈரான் :தலைநகர் டெஹ்ரான், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் வாழும் இந்நகரில், மழை பெய்ய வேண்டி நவம்பர் 14, 2025 அன்று டெஹ்ரானின் புனித (Imamzadeh Saleh Shrine)யில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இஸ்திஸ்கா (Istisqa) என்ற சிறப்பு இஸ்லாமிய தொழுகையை நடத்தினர். இதற்கு ஆயத்துல்லா சய்யத் ஜமால் அல்-தின் பர்வர் தலைமை தாங்கினார். இதே போன்று ஈரானின் கிழக்குப் பகுதியான மஷ்ஹத் நகரிலும் மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு, தண்ணீர் நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு டெஹ்ரானில் மழைப்பொழிவு 152 மி.மீ. மட்டுமே – இது 57 ஆண்டுகளின் சராசரியை விட 40% குறைவு. நகரின் 5 முக்கிய அணைகளில் ஒன்று முற்றிலும் வெறுமையாகி, இன்னொன்று வெறும் 8% தண்ணீரே கொண்டுள்ளது. மொத்த சேமிப்பு திறன் 500 மில்லியன் கியூபிக் மீட்டர்களிலிருந்து 250 மில்லியனாக சரிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் தண்ணீர் அழுத்தம் குறைக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டெஹ்ரானின் நிலப்பரப்பு ஆண்டுக்கு 300 மி.மீ. அளவில் சரிந்து வருவதால், கட்டிடங்கள், சாலைகள் ஆகியவை ஆபத்தில் உள்ளன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நவம்பர் 6 அன்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் இது குறித்து அரசு தரப்பு, “டிசம்பர் வரை மழை பெய்யாவிட்டால், டெஹ்ரானில் தண்ணீர் கட்டுப்பாடு அறிவிக்கப்படும். தேவைப்பட்டால் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும்.” இது உண்மையான திட்டமல்ல என்றாலும், மக்களை எச்சரிக்கும் நோக்கம் என்று அரசு விளக்கியது.

நகராட்சி தலைவர் மெஹ்தி சம்ரான், “முன்பு மக்கள் வாலிமைக்குச் சென்று மழைக்காக தொழுதுவந்தனர்” என்று கூறி, தொழுகைக்கு அழைப்பு விடுத்தார். அரசு தண்ணீர் சேமிப்பு டாங்கிகள் வாங்குவோருக்கு உதவி அளிக்கிறது, ஆனால் பலருக்கு செலவு அதிகம்.இந்த நெருக்கடிக்கு காலநிலை மாற்றம், தொடர்ச்சியான வறட்சி, சட்டவிரோத கிணறுகள், அணை கட்டுமானங்கள், விவசாயத்தில் அதிக நீர் பயன்பாடு ஆகியவை காரணம். டெஹ்ரான் “வாழ தகுதியற்ற நகரமாக” மாறலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈரான் தலைநகரில் தண்ணீர் பற்றாக்குறை : "இதே நிலை நீடித்தால்".. மக்கள் கண்ணீர்!