அமெரிக்க வன்முறை.. 70,000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..!

Twitter has blocked 70,000 Twitter accounts that have posted comments related to the violence in order to delete the video.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்ய கடந்த 7-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாராளுமன்றத்தில் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க  போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து பல உலக நாடு தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இந்நிலையில், வன்முறை தொடர்பாக வீடியோக்கள் டுவிட்டரில் பகிரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வீடியோவை நீக்கும் வகையில் வன்முறை தொடர்பான கருத்துக்களை பதிவிட்ட 70,000 டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.