பயங்கர தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!

USA: At least 13 people, including seven children, have been killed in a fire that broke out in an apartment building.

அமெரிக்கா:அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பொது வீட்டுவசதி ஆணையத்திற்குச் சொந்தமான நகரின் ஃபேர்மவுண்ட் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நீண்ட நேரம் கடுமையாக போராடினர்.அதன்பின்னர்,தீ அணைக்கப்பட்டது.ஆனால், இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும்,தீ விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தீயணைக்கும் கருவிகள் வேலை செய்யாமல் போனதே,உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.