ஐ.நா. சிறப்பு தூதர் பதிவில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீர் விலகல்!

Default Image

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதிவில் இருந்து ஏஞ்சலினா ஜோலி விலகினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஐ.நா சபையுடன் இணைந்து பணியாற்றிய ஏஞ்சலினா ஜோலி, அகதிகளை நேரடியாக சந்தித்து தொண்டாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதிவில் இருந்து பரந்த மனிதாபிமான எண்ணத்தில் நேரடியாக மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஈடுபடுவதற்கு விலகுவதாக அறிவித்துள்ளார். அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்