நேற்று இரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 70 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து 17-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தான். தற்போது, […]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. 17வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தான். தற்போது காசா பகுதியில் வசிக்கும் மக்கள், உணவு தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து […]
இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 8வது நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ்–இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இருளில் மூழ்கிய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, ஏற்கனவே, காசா நகரில் மின்உற்பத்தி மற்றும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 7 நாளாக நடைபெற்று வரும் பயங்கர போரில் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் 447 குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் […]
காசாவில் இருந்து மக்கள் வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவில் ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை தகர்த்து வருகிறது. இதுபோன்று […]
ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். காசா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அங்கு வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு […]
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த தாக்குதலில் இதுவரையில் 2000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 1200 பேர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 900 க்கும் அதிகமானோர் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் […]
2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல். 2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு […]
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதிவில் இருந்து ஏஞ்சலினா ஜோலி விலகினார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் பதவியில் இருந்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி திடீரென விலகியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஐ.நா சபையுடன் இணைந்து பணியாற்றிய ஏஞ்சலினா ஜோலி, அகதிகளை நேரடியாக சந்தித்து தொண்டாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சலினா ஜோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையின் சிறப்பு தூதர் பதிவில் இருந்து பரந்த […]
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், டிசம்பர் 14-ம் தேதி மகாத்மா காந்தி சிலை திறப்பு. ஐக்கிய நாடு தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் டிச.14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா.தலைமையகத்தின் வடபகுதியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார். சிலை திறப்பில் ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். […]
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என சிபிஎம் மூத்த தலைவர் கோரிக்கை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், இதுதொடர்பாக பேசிய சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், உலக […]
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறைக்கு ஐ.நா. மனித […]
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று நிறைவேறியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, […]
ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு. சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன் பயன்படுத்து வந்தாலும், இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கஞ்சா மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். ஐ.நா.வின் […]