கூடைபந்தாடிய முன்னாள் அதிபர் ஒபாமா.
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜோ பைடனுக்கு ஆதரவாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு சென்ற அவர், எந்தவொரு சலனமும் இல்லாமல், மிகவும் எளிதாக பந்தை கூடைக்குள் போடுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில், ஒபாமா அவர்கள் ‘இப்படித்தான் நான் செய்வேன்’ என கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோவை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா அவர்கள் பள்ளி பருவத்திலிருந்து வெள்ளை மாளிகையில் அமரும்வரை, தவறாமல் கூடைப்பந்து விளையாட்டில், ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node