அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார். ஜனநாயக கட்சியின் மாநாடு ..! இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் இரு கட்சியினரும் முனைப்பாக இருந்து வரும் நிலையில், நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடானது சிகாகோ நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாடானது கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட்-22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. […]
அமெரிக்கா : இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் 5-ம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்பும் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் மற்றும் மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலகினார். […]
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை செய்ததாகவும்,தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும்,தற்போது நலமாக உள்ளதாகவும் ஒபமா தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: “எனக்கு இரண்டு நாட்களாக தொண்டையில் வலி இருந்தது.நான் கொரோனாநேர்மறை சோதனை செய்தேன்.ஆனால்,தற்போது நன்றாக இருக்கிறேன்.மிச்செலேவும் நானும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,மேலும் அவரது சோதனையில் கொரோனா […]
கூடைபந்தாடிய முன்னாள் அதிபர் ஒபாமா. அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜோ பைடனுக்கு ஆதரவாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு சென்ற அவர், எந்தவொரு சலனமும் இல்லாமல், மிகவும் எளிதாக பந்தை கூடைக்குள் போடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. அந்த வீடியோவில், ஒபாமா அவர்கள் ‘இப்படித்தான் நான் செய்வேன்’ என கூறிவிட்டு […]
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் முகவரிக்கு உடனடியாகப் […]
அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக உள்ளவர்களை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும்.அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. 3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் உலக தலைவர்களில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 24.8 மில்லியன் ஆகும்.தற்போதைய அமெரிக்க அதிபர் […]