ரூ.9,800-ஐ மென்று சாப்பிட்ட செல்லப்பிராணி.
நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த செல்லப் பிராணிகளால் சில நேரங்களில் நமக்கு இழப்பீடுகள் கூட ஏற்படுவது உண்டு. அந்த வகையில் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் ஒரு சிறிய பானை ஒன்றை வைத்து, அதில் தான் மிச்சப்படுத்திய பணத்தை சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது செல்லப்பிராணியான பெக்கி, அந்த பானையிலிருந்து 100 டாலர் (ரூ.9,800) பணத்தையும் சாப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஜோஸலின் வீடு திரும்பியபோது அவரது கணவர் பணத்தைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் விளையாட்டுக்கு அவர் சொல்வதாக நினைத்து முதலில் அவரை நம்பாமல் இருந்த ஜோஸலின், அதன் பின் கிழிந்த ரூ.20 நோட்டை கண்டதும் அந்த நம்பிக்கை இழந்து விட்டார்.
இந்நிலையில், பணத்தை சாப்பிட்ட பெக்கி உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மறுநாள் தன சாப்பிட்ட அணைத்து பணத்தையும் கக்கி உள்ளது. அதனை கழுவி அதில் உள்ள என்னை கண்டுபிடித்தால் பணத்தை திரும்ப பெறலாம் என நினைத்து, அந்த பணத்தை கழுவியுள்ளார். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
unknown nodeஇதுகுறித்து ஜோஸலின் கூறுகையில், பெக்கி எதையும் சாப்பிட்டுவிடும் என்பதற்காக நான் எனது படுக்கையறையை எப்போதும் மூடியே தான் வைத்திருப்பேன். ஆனால், பெக்கி அதையும் தாண்டி பணத்தை சாப்பிட்டுள்ளது. இதை நினைத்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை. எனக்கு பெக்கியை மிகவு பிடிக்கும் என பரிதாபமாக தெரிவித்துள்ளார்.