Swiggy: 250 பணியாளர்கள் பணிநீக்கம்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Default Image

நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி  (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.  

உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி (Swiggy) தனது நிறுவனத்தில் பணியாற்றும்  250 பணியாளர்களை இந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்விக்கியின் முக்கிய அதிகாரியான (HR) கிரிஷ் மேனன், சமீபத்தில் முடிவடைந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். தற்பொழுது நிறுவனமானது அதன் குழுக்களை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் இந்த டிசம்பர் மாதத்திற்குள் 250கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது போன்ற பணிநீக்கங்கள் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளிலும் நடக்க வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்