13,500 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவ்..! சாதனை படைத்த 104 வயது மூதாட்டி..!
சிக்காகோவை சேர்ந்த 104 வயது மூதாட்டி டோரத்தி. இவர் 1918 ஆம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தார்.தற்போது இவர் வயதானாலும், இவர் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். விமானத்திலிருந்து குதித்த மூதாட்டி சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து பாதுகாப்பாக தரையிறங்கினார்.
இதற்கு முன்பதாக தனது 100 வயதில் ஸ்கை டைவ் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் முதலில் தனது 100 வயதில் செய்த போது பயந்ததாகவும் தற்போது தாமாக குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் விடுமுறை நாட்களில் மற்ற நாடுகளுக்கு சென்று சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன், ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயதான லின்னியா இங்கேகார்ட் லார்சன் என்பவரால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் மிக வயதான ஸ்கைடைவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த சாதனையை 104 வயதான மூதாட்டி டோரதி முறியடித்துள்ளார். விரைவில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. இவருக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 105 ஆவது வயது தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.