சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி வருகின்றன. ஏற்கனவே, ஜபில் (Jabil) எலெக்ட்ரானிக் நிறுவனம் திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு செய்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிகாகோவில் வைத்து கையெழுத்தாகின. அதே போல, சான் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சான் பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சிகாகோ சென்றடைந்தார். சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோவிலும் உள்ள தமிழர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு, அங்குள்ள தமிழர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஓய்வு இடையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதே போன்று, தற்போது […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மேம்பட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து தமிழர் பரம்பரியதோடு அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன […]
அமெரிக்கா : வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர். கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக […]
சிக்காகோவை சேர்ந்த 104 வயது மூதாட்டி டோரத்தி. இவர் 1918 ஆம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தார்.தற்போது இவர் வயதானாலும், இவர் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். விமானத்திலிருந்து குதித்த மூதாட்டி சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து பாதுகாப்பாக தரையிறங்கினார். இதற்கு முன்பதாக தனது 100 வயதில் ஸ்கை டைவ் […]
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு;6 பேர் உயிரிழப்பு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினவிழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,அதன் ஒரு பகுதியாக சிகாகோவின் ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(ஜூலை 4) நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு பலர் சுடப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துவிட்டதாகவும்,மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்,அவர்கள் […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பல பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன. இந்நிலையில்,கடந்த வார இறுதியில் சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும்,மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த வகையில்,சிகாகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மைனர் மற்றும் 62 வயதான பெண் உட்பட அனைத்து வயதினரும் அடங்குவர்.பிரைட்டன் பார்க், […]
பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் கிளார்க் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் சிகாகோ நகரில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சிக்னலுக்காக காத்திருந்து பிறகு பயணித்த போது எதிரே வந்த கார் ஒன்று இடித்து மோதியுள்ளது. இச்சம்பவத்தில் கெவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து செய்த காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அந்த பெண்ணை இப்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெவின் கிளார்க்கின் வயது 32. இவர் 2003 இல் நடித்த […]
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆயுதம் வைத்திருந்ததாக கூறி போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே டான்ட் எனும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொதுமக்களிடையே அச்சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள 13 வயது சிறுவன் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சி சிகாகோ போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. 9 […]
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசுமுறை பயணமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகாகோ சென்றார். சிகாகோ விமானநிலையம் வந்தடைந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விமானநிலையத்தில் காத்து கொண்டு இருந்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுத்தும் ,மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சிகாகோவில் உள்ள குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.