28 பேருடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்!

The Russian plane carrying 28 passengers suddenly went missing.

28 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளது.

பெட்ரோபாவ்லோவ்ஸ்க் நகரிலிருந்து பலானாவுக்கு சென்றுகொண்டிருந்த ஏ.என்.26 என்னும் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் கம்சட்கா ஏவியேஷன் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானம் 1982 ஆண்டு முதலே செயல்பட்டு வருவதாகவும் சீன நிறுவனமாகிய டாஸ் எனும் நிறுவனம் கூறியுள்ளது.

காணாமல் போன விமானம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தேடுதல் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் பலானாவிற்கு அருகில் சுமார் 10கி.மீ தொலைவில் வந்த பொழுதே தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.