காத்மாண்டு :நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததையடுத்து, நாடு ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இளைஞர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பரவிய போராட்டங்களால் அரசுக்கு எதிரான கலவரங்கள் தீவிரமடைந்தன, இதில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
போராட்டக் குழுவினருடன் ராணுவம் தரப்பில் ஆன்லைன் மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டது. இருப்பினும், சுசிலா கார்கி இந்தப் பொறுப்பை ஏற்பாரா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
73 வயதான சுஷிலா கார்க்கியைத் தவிர, காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா மற்றும் முன்னாள் மின்சார வாரிய குல்மான் கிசிங் ஆகியோரின் பெயர்கள் அடுத்த தலைவராகப் பரிசீலிக்கப்பட்டன. சுஷிலா கார்க்கி, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஜூலை 2016 முதல் ஜூன் 2017 வரை பதவி வகித்ததன் மூலம் வரலாற்றைப் படைத்தார்.
