நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற நிலையில் 3 வது முறையாக பதவி ஏற்பு ! கே.பி.சர்மா ஓலி தற்போது நேபாளின் 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார், அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமராக அறிவிக்கப்பட்டார். திங்களன்று சபை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ஓலி இழந்ததை அடுத்து வியாழக்கிழமை இரவு 9 மணிக்குள் புதிய அரசாங்கத்தை அமைக்க பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி கேட்டுக் கொண்டார், […]
நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி. நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். மேலும் சபையில் […]
ராமர் பற்றிய பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார். […]
நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலி கடந்த சில காலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருவதால், அவரது கட்சியில் உள்ள பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மூத்த தலைவர்கள் கேபி சர்மா ஒலியை கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு […]