காத்மாண்டு :நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் கருத்து பரப்புவதாக கூறி சமூக வலைத்தளங்களை கட்டுபடுத்த அரசு முடிவெடித்த நிலையில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது. ஆம், நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் ‘ஜென் Z’ போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
சமூக வலைதளத் தடைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். இன்று பிரதமர் சர்மா ஒலிவும் பதவி விலகியுள்ளார்.
அதாவது, சமூக வலைதள தடை, ஊழல், சித்திரவதை, பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையில் தொடங்கிய இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி, 19 பேர் கொல்லப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதன் விளைவாக, பிரதமர் கே.பி. சர்மா ஒலி (K.P. Sharma Oli) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். போராட்டக்காரர்கள் அமைச்சர்கள், அதிபர், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வீடுகளையும் தாக்கி, தீ வைத்துள்ளனர்.
