நேபாளம் :நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்க்கி, குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது 18-லிருந்து 16 ஆகக் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நேபாளத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க, மார்ச் 5, 2026 நாடாளுமன்றத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த முடிவு, ஜெனரல்-இசட் தலைமுறையினரின் போராட்டங்களைத் தொடர்ந்து, அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. சுஷிலா கார்க்கி, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி உரையில், இளைஞர்களின் வாக்குரிமையை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவித்தார்.
இடைக்காலப் பிரதமராக பதவியேற்ற பின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சுசீலா கார்க்கி, தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த அவசரச் சட்டத்தை வெளியிட்டதாக அறிவித்தார். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் நேபாள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக அரசாங்கம் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, ஜெனரல் இசட் போராட்டங்களின் போது மாணவர்கள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதியாக இருக்கிறோம் என் சுஷிலா கார்க்கி கூறினார்.
