நிலவின் மேற்பரப்பில் "நீர்" இருக்கிறது.. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

unknown node

நாசா விஞ்ஞானிகள், அவர்களின் சோபியா டெலஸ்கோப் மூலம் மேற்கொண்ட ஆய்வில் நிலவின் சூர்ய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டறிந்துள்ளனர். நிலவின் குளுமையான பகுதிகளை தவிர்த்து, அதன் மேற்பகுதியில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் காரணமாக நிலவின் பூமியை நோக்கிய பகுதிகளில் அடுத்த கட்ட ஆய்வுகளை நடத்தவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.