வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் இவான்கா ட்ரம்ப் குடும்பத்தினர்!

In the United States, Ivanka Trump, the daughter of Donald Trump, attended an apology ceremony for turkeys with her family.

அமெரிக்காவில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், டொனால்ட் ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அமெரிக்க, கண்டா மக்களால், ஒவ்வொரு ஆண்டும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.