107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை சிறப்பு விமானம்!

A 107th Indian Air Force special flight from Kabul, Afghanistan departed this morning with 168 people on board, including 107 Indians.

ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இன்று காலை 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் கிளம்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக துஷான்பே  விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 107 பேர் தற்போது இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டுள்ளனர்.