பெரும் பதற்றம்! ஈரான் தலைவரான அலி லாரிஜானி தாக்குதலில் பலி? இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் மிக மூத்த தலைவரான அலி லாரிஜானியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Ali Larijani

ஈரான் :இஸ்ரேல் அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளருமான அலி லாரிஜானியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். இது ஈரான் – இஸ்ரேல் மோதலில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.அலி லாரிஜானி ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு அடுத்தபடியாக மிக முக்கிய பொறுப்பு வகித்தவர். அவர் ஈரானின் பாதுகாப்பு உத்திகளை வழிநடத்தி வந்தார்.

கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, லாரிஜானி தான் ஈரானின் இரண்டாவது மிக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். அவரது மரணம் ஈரான் தலைமைத்துவத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரிஜானியின் புகைப்படத்துடன் இஸ்ரேல் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லாரிஜானி கடந்த மார்ச் 13 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டிருந்தார். அதே நாள் அமெரிக்கா அவரது தகவலுக்கு ரூ.92 கோடி (10 மில்லியன் டாலர்) பரிசு அறிவித்திருந்தது.லாரிஜானியின் கடைசி X பதிவு முஸ்லிம் உலகிற்கு எழுதிய கடிதமாக இருந்தது. அமெரிக்கா – இஸ்ரேல் மோதலில் ஈரான் தனது போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவுக்கு சில மணி நேரங்களிலேயே அவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த படுகொலை ஈரான் தலைமைத்துவத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமேனியின் வாரிசு மொஜ்தபா கமேனி ஏற்கனவே கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் இருக்கும் நிலையில், லாரிஜானியின் மரணம் ஈரானின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. மற்றொரு மூத்த தளபதி கோலம்ரெஜா சொலேமானியும் திங்கள்கிழமை இரவு இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதே சமய, ஈரான் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. ஆனால் இஸ்ரேலிய அறிவிப்பு லாரிஜானியின் கடைசி கடிதத்துடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் இப்போது ஈரான் தரப்பின் பதிலடியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தமிழகத்தில் எல்பிஜி தட்டுப்பாடு, எண்ணெய் விலை உயர்வு போன்றவை இந்த மோதலின் நேரடி எதிரொலியாகத் தொடர்ந்து வருகின்றன