காசா : இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பு போரானது சுமார் 17 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை அழிக்க இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. அமெரிக்கா தலையீட்டினால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியன்று இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இருதரப்பு இடைக்கால போர்நிறுத்தம் தொடங்கியது. சுமார் 6 வாரம் இந்த […]
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஹமாஸ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தது. இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். பிரச்சினை இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இஇரு அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் […]
அமெரிக்கா : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு சூழலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஹமாஸ் கைதியாக வைத்திருக்கும் நபர்களை விடுவிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்த போரில் கிட்டத்தட்ட 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், அங்கு பதட்டமான சூழல் தான் நிலவிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே […]
காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த […]
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. காசா நகரில் இன்று (ஜனவரி 19) முதல் 6 வார காலத்திற்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும், இந்த போர் நிறுத்த காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. முதலில் இன்று ஹமாஸ் தரப்பில் உள்ள 33 பணய கைதிகளில் 3 பேரை காசா நகரில் […]
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது இன்று முதல் 6 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 வார காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டது. இன்று மாலை இந்த பரிமாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தரப்பு 33 பணய […]
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தலத்திலும் ஈடுபட்டன. இதனை அடுத்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் […]
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் கடந்த 2023-ல் தொடங்கிய இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர், கிட்டத்தட்ட 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். காசா பகுதியில் 15 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்கள் […]
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 15மாதங்கள் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. பல்வேறு நாட்டு தலைவர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்னர். இந்தியாவும், […]
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. 1,000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. […]
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். திருப்பி இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில், 46,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இதற்குப் […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருக்கிறது. இந்த போர் நடைபெற்ற போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூரமான தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களும் தாக்கி நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து சென்றார்கள். இதனால் இன்னுமே கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கள் மீதே தாக்குதல் நடத்துகிறீர்களா? உங்களை அழிக்கும் வரை […]
பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியவர்கள் தான் ஹிஸ்புல்லா அமைப்பினர். அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் தான் இரான். ஒரு வருடமாக இவர்கள் இடையில் மாறி மாறி நடந்த தாக்குதலில், பல்லாயிரம் கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், உலக நாடுகளிடையே போர் பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஐ.நா சபையிலும் இது குறித்த சர்ச்சைகளுக்கு இஸ்ரேல் கண்டுக்காமல் […]
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தற்போது வரை முழுதாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அதேபோல, இஸ்ரேல் ராணுவத்திற்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,700 லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 15 ஆயிரத்திற்கும் […]
ஜெருசலேம் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நின்றபாடில்லை. கடந்த ஓராண்டாகவே இந்த இரு அமைப்புகளும் இஸ்ரேல் மீதும் இஸ்ரேல் இந்த இரு அமைப்புகளின் மீதும் போர் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளைத் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில், காசா மீது […]
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் என்பது நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்ற நிலையில், அதில் 117 கைதிகளை போர்க்கால அடிப்படையில் இஸ்ரேல் உயிருடன் மீட்டது. மேலும், ஹமாஸ் அமைப்பில் கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. மேலும், 101 இஸ்ரேலியர்கள், தற்போது ஹமாஸ் வசம் உள்ள நிலையில் இன்னுமும் இஸ்ரேல் […]
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையில் காசாவில் குறிப்பிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தான் வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தாக்குதலை தொடர்ந்து வருகிறார். ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் […]
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், விசாரித்து வருவதாகவும் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து வேகமாக வந்த குண்டுகள் தோட்டத்தில் விழுந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது, அந்த நேரத்தில் […]
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும் இடத்தில் மக்கள் வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் விமான நிலையத்தின் அருகாமையில் வான்வெளித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதன் விளைவாக அங்கிருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி இருக்கிறது. […]
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.