பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள் டூடுல்...!

Google Doodle says it thanks public health workers and medical researchers for working in the midst of the corona spread crisis.

கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் பணிபுரிவதால்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூகுள் டூடுல் கூறுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மட்டும் களத்தில் இருந்து தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணிபுரியும்,பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகுள் டூடுல் திங்களன்று ஒரு சிறப்பான விளக்கத்துடன் நன்றியை கூறியுள்ளது.

அதாவது,இன்றைய அனிமேஷன் செய்யப்பட்ட கூகுள் டூடுல் ஒரு இதய வடிவிலான ஈமோஜியைக் கொண்டுள்ளது.இந்த ஈமோஜி,அனைத்து பொது சுகாதார ஊழியர்களுக்கும்,மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் முழு அன்பையும் மரியாதையையும் தருவதைக் குறிக்கிறது.