குவைத் எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து..! 2 பேர் படுகாயம்..!

Fire erupts at Kuwait's largest oil field; two injured

குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

குவைத்தில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் நிதானமான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவைத் எண்ணெய் நிறுவன செய்தி தொடர்பாளர் குசாய்-அழ-அமர் குணா தெரிவித்துள்ளார்.

குவைத்தில் தென்கிழக்கு பாலைவனத்தில் உள்ள கிரேட் புர்கன் களத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தியை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 1.6 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும்  தெரிவித்துள்ளது.

மேலும், உலகின் மிகப்பெரிய உற்பத்தி துறைகளில் புர்கனும் ஒன்றாகும். சவூதி அரேபியாவில் உள்ள கவார் களத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.