உலக பணக்காரர் பட்டியல்: பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க்!

According to bloomberg billionare index, Elon Musk overtakes Bill Gates to grab world's second-richest ranking.

உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மாஸ்க், இரண்டாம் இடத்திற்கு வந்தார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இதன் காரணமாக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி, எலான் மஸ்க் 2 ஆம் இடத்திற்கு வந்தார். தற்பொழுது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, 128 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர் வலைத்தளம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, 184 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 128 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க், மூன்றாம் இடத்தில் 128 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், நான்காம் இடத்தில் 105 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பேர்னால்டு அர்னால்ட், அவரை தொடர்ந்து, 102 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.