ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய எலன் மஸ்க் மறுப்பு ...!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகிய எலன் மஸ்க் அவர்கள் பிரபல சமூக வலைதளமான நிறுவனமாகிய ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியிருந்தார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகிய எலன் மஸ்க் அவர்கள் பிரபல சமூக வலைதளமான நிறுவனமாகிய ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியிருந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அண்மையில் எலன் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார்.

ஆனால், தற்போது ட்விட்டர் நிர்வாக குழுவில் எலன் மஸ்க் சேர மாட்டார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பல முறை அவரிடம் கேட்டுப் பார்த்தும், அவர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

unknown node