ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே முக்கிய கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரில் எதிர்கால முடிவு குறித்த முக்கிய கருத்துக்கணிப்புகளில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார். நேற்று மஸ்க், ட்விட்டரில் தான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என கருத்துக்கணிப்பு கேட்டிருந்தார். மேலும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கணிப்பில் 57.5% […]
பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட்-ன் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு எலன்மஸ்க் அவரது பாணியில் நக்கலாக பதிலளித்துள்ளார் . பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட், திங்களன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார், அதில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் “அரை-சீனராக” இருக்கலாம் மற்றும் “சிக்கியுள்ள முதல் மரபணு கலப்பினமாக” இருக்கலாம் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராப் பாடகர் கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் சமூக வலைத்தளமாகிய ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கை உலகின் நம்பர் 1 பணக்காரராகிய எலன் மஸ்க் அவர்கள் வாங்கியுள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்கள், ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு தனது ட்விட்டர் கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டாலும் தான் மீண்டும் ட்விட்டருக்கு […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகிய எலன் மஸ்க் அவர்கள் பிரபல சமூக வலைதளமான நிறுவனமாகிய ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியிருந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அண்மையில் எலன் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார். ஆனால், தற்போது ட்விட்டர் நிர்வாக குழுவில் எலன் மஸ்க் சேர மாட்டார் என ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் பல முறை அவரிடம் கேட்டுப் […]
இந்தியா மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகிறது. எனவே இது குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவை சேர்ந்த நபரிடம், உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரக்கூடிய டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான […]