கேன்சர் நோயாளியான ஒரு சிறு குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற டாக்டர் ஒருவர் பேட்மேனாக மாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்ற பேட்மேனாக மாறிய டாக்டரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மருத்துவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய குழந்தையிடம் உங்களுடைய ஆசை என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு தனது விருப்பம் பேட்மேனை சந்திக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார் .
அதற்கு அடுத்த நாள் அந்த மருத்துவர் தனது நோயாளியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பேட்மேனாக உடையணிந்து குழந்தையின் முன் சென்றுள்ளார் . உடனடியாக அந்த குழந்தை மருத்துவரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வருவதுடன் அதிகளவில் லைக்குகளையும் பெற்று வருகிறது .மேலும் இந்த வீடியோவை பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை உண்டாக்குவதுடன் சிறு புன்னகையையும் ஏற்படுத்துகிறது.
unknown node