பங்களாதேஷில் புதியதாக 2,341 பேருக்கு கொரோனா

Corona for 2,341 newcomers in Bangladesh

பங்களாதேஷில் வியாழக்கிழமை புதியதாக 2,341 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 756,955  ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,393 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பங்களாதேஷ் முழுவதும் 24,928 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 677,101 ஆக உயர்ந்துள்ளது ,இதில் இன்று மட்டும் 4,782 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பங்களாதேஷில் கொரோனாவின்  இறப்பு விகிதம் இப்போது 1.51 சதவீதமாகவும், தற்போதைய மீட்பு விகிதம் 89.45 சதவீதமாகவும் உள்ளது.