பங்களாதேஷில் வியாழக்கிழமை புதியதாக 2,341 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 756,955 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பங்களாதேஷ் முழுவதும் 24,928 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 677,101 ஆக உயர்ந்துள்ளது ,இதில் இன்று மட்டும் 4,782 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பங்களாதேஷில் கொரோனாவின் இறப்பு விகிதம் இப்போது 1.51 […]
எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார். பேஸ்புக் லைவ்வில் பேசிய வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் “எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள மோதல் 2008ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியது. U19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக வங்கதேசத்தில் விளையாடி வருகிறேன். அப்போவே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். U19 போட்டிகளில் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா முத்தரப்பு […]
வங்காள தேசத்தின் முதல் அதிபரும் , தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித் கருதப்பட்டார்.இவர் மீது மேலும் 4 தலைவர்கள் கொலை வழக்கு இருந்தது.இந்நிலையில் அப்துல் மஜித் இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் வங்காள தேசம் திரும்பிய அப்துலை டாக்கா போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் எப்போதும் தண்டனை […]
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் […]
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தது ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் தீவிரவாதிகளின் ஊடுருவல் பற்றிய செய்திகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர், லடாக், மேற்குவங்கம் போன்ற தரைவழி எல்லை பகுதிகளிளிலும், குஜராத், மும்பை, தமிழ்நாடு போன்ற கடல்வழி எல்லைகள் வழியாகவும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை […]
கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்தில் ஒரு பள்ளி தலைமையாசிரியர் மீது ஒரு மாணவி பாலியல் போலீசில் புகார் அளித்திருந்தார். அதாவது அந்த மாணவியிடம் தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்து தவறாக நடந்துகொண்டதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் கைது செய்யபட்டுள்ளார். இதனால் கோபமுற்ற தலைமையாசிரியர் சிறையிலிருந்தபடியே மாணவியை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு எழுத வந்த அந்த மாணவியை சிலர் இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளனர். இதில் […]
2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இந்நிலையில் இன்று இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் […]
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியானது டாக்காவில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட்டாகி 190 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் எவின் லீவிஸ் 36 பந்துகளில் 89 ரன்கள் விளாசி தனது அணிக்கு ரன் சேர்த்தார். https://twitter.com/NaaginDance/status/1076481154843377664 191 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் இன்று மிர்பூரில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கும் நேரத்தில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தன் அணியினரை எச்சரித்துள்ளார். இரு அணிகளும் 69 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன, இதில் வங்கதேசம் தன் நாட்டில் 27 போட்டிகளிலும் வெளியெ 13 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் பிரெண்டன் டெய்லர் இவர் 46 இன்னிங்ஸ்களில் 1222 ரன்கள் எடுத்துள்ளார். […]
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் உடைந்த கையுடன், ஒரு கையால் ‘பேட்டிங்’ செய்ததார். துபாய்: துபாயில் நடந்த முதல் லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி, இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இப்போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்த போது, இலங்கையில் லக்மல் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், தமிம் இக்பாலின் இடது மணிக்கட்டு பகுதியில் […]