ரஷ்யாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பதிவாகியுள்ளன.
தொடர்ந்து இரண்டாவது நாளாக, ரஷ்யாவில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. மற்றும் 51,699 சோதனைகள் பாசிட்டிவ் ஆக வந்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கொரோனா வைரஸ் பணிக்குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யா வெள்ளிக்கிழமை 50,952 புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவுசெய்தது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் முதல் முறையாக 50,000 ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.