இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசியின் தலைநகரான பாலுவில் உள்ள ஒரு ஓடும் ஆற்றில் ஒரு முதலை மூன்று ஆண்டுகளாக ஒரு மோட்டார் சைக்கிள் டயரை அதன் கழுத்தில் சுமந்து கொண்டு உள்ளது.3 ஆண்டுகளுக்கு முன்னர் யரோ ஒருவர் வீசிய மோட்டார் சைக்கிளின் டயர் 13 அடி நீளம் கொண்ட சியாமி என்ற முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது.இதனால் முதலை உணவை வேட்டையாடி சாப்பிட்டாலும் அதன் தொண்டைப் பகுதியில் உள்ள டயர் இறுக்கமாக இருப்பதால் சியாமி முதலையால் சரியாக உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சியாமி முதலை பட்டினியால் வாடி வருகிறது.
unknown nodeமுதலையின் தொண்டை பகுதியில் உள்ள டயரை நீக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் செய்தும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. விரைவில் டயரை முதலையின் கழுத்தில் இருந்து அகற்றப்படாவிட்டால் டயர் முதலை கழுத்தை நெரிக்கும் என பாதுகாவலர்கள் கவலை கொண்டுள்ளனர்.முதலையின் தொண்டை பகுதியில் இருந்து டயரை நீக்க அதிகாரிகள் தொடந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.