ஆப்கனிஸ்தான் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் சுட்டு கொலை!

Journalist and driver shot dead by unidentified man in Afghanistan This is the 10th TV journalist has been killed with him this year alone.

ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இவர் சென்றுகொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்பெண் பத்திரிகையாளரும் , ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த கொலைக்கு பின்னல் தங்களது குழு இல்லை என தலிபான் தீவிரவாத அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்கனிஸ்தான் பாதுகாப்பு நிறுவனங்களிடம் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆப்கனிஸ்தானின் சுதந்திர பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது. இத்துடன் ஆப்கனிஸ்தானில் இந்த வருடம் மட்டும் 10 பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.