அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிய 8 வாகனங்கள் – 4 பேர் உயிரிழப்பு!

8 vehicles collided with each other in the United States. Four people were killed and several others were injured in the accident.

அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரின் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்ட நேரத்தி,ல் பால் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற பயணிகள் வாகனத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் எட்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதியதில் பால் லாரி தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து உள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.