பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

A magnitude 6.7 earthquake shakes the Philippines

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள கலடாகன் பகுதியில் நேற்று இரவு 8.49 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று இரவு 8.49 மணியளவில் பிலிப்பைன்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள கலடாகனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 116 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், முழுமையான சேதங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.