நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு – 34 பேர் உயிரிழப்பு...!

At least 34 villagers have been killed in a mysterious shooting in Nigeria.

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா பகுதி கவுரா நகரில் உள்ள மடமய் எனும் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் பொழுது இந்த மர்ம நபர்கள் சில வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

இது குறித்து அரசு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரசுப் படையினர் மர்ம நபர்களை விரட்டி அடித்துள்ளனர். அதன் பின்பு மூன்று வீடுகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் நைஜீரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.