நைஜீரியா : ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 147 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. டவுராவின் உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள கானோ-ஹடேஜியா விரைவுச் சாலையில் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள அகாயி பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சட்டென திருப்பிபோது டேங்கர் கவிழ்ந்துள்ளது. அப்போது, டேங்கர் லாரியில் இருந்த கசிந்த […]
அபுஜா : நைஜீரியாவில் பள்ளி இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திடீரென நேற்று இந்த பள்ளி இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
நைஜீரியாவில் பிளாட்டியூ மாநிலம் உள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இருவேறு கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னும் தெளிவாக தெரியவில்லை என ராணுவ கேப்டன் ஓயா ஜேம்ஸ் தெரிவித்தார். இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு அடிக்கடி சண்டைகள் நடைபெறும். கடந்த மே மாதம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 100 […]
நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி கூறினார். அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி. இன்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் அயல்நாட்டு தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்க்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் […]
நைஜீரியாவில் $278 மில்லியன் மதிப்புள்ள 1800 கிலோ கொக்கைன் எனும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உலகம் முழுவதிலும் அதிகமானோர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிக்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. நைஜீரியாவின், லாகோஸில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 1.8 டன் கொக்கைன் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் $278 மில்லியன் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க ஏஜென்சியின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட போதைப்பொருள்கள் ஐரோப்பா […]
குரங்கு அம்மை நோய்க்கு நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. […]
நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள […]
நைஜீரியாவில் உள்ள வடமேற்கு மாநிலமாகிய சோகோடோ எனும் பகுதியில் உள்ள ஆற்றில் மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சொகோடோ பகுதியின் அலியு தண்டனி எனும் அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் எனவும், அவர்கள் பக்கத்தில் உள்ள பதியவா எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் […]
நைஜீரியா அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாவட்டத்தில் மாகாணத்தில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது.இந்த கட்டிட பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு […]
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா பகுதி கவுரா நகரில் உள்ள மடமய் எனும் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் பொழுது இந்த மர்ம நபர்கள் சில வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். இது குறித்து அரசு படையினருக்கு […]
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 150 பள்ளி குழந்தைகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளி மாணவர்களை கடத்தி சென்று தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். மேலும் சில பயங்கரவாத கூட்டமும் பள்ளி மாணவிகளை கடத்தி சென்று பிணை கைதிகளாக தங்கள் தேவைகளுக்காக வைத்துக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நைஜீரியாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் மாணவர்களை […]
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாதிகளால் பள்ளி மாணவர்கள் பிணைக்கைதிகளாக கடத்தப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், நைஜீரியா கெப்பி மாகாணத்திலுள்ள 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை கடத்தி சென்று தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் நைஜீரியாவில் மற்ற பிற பயங்கரவாத ஆயுதக் குழுக்களும் பள்ளி மாணவிகளை கடத்தி பிணை கைதிகளாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் மூலமாக தங்களுக்கு தேவையானவற்றை செய்துகொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில […]
நைஜீரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் நைஜீரியாவில் இரண்டு தனியார் பேருந்துகள் பிர்னிங்குடு என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேருக்கு நேர் மோதிய வேகத்தில் பேருந்துகளில் தீப்பிடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பிறகு தகவல் அறிந்து அங்கு மீட்புக்குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தென்பட்டது போன்று அல்லாமல் மற்றோரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு தனி பரம்பரை என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (ஆப்பிரிக்கா சிடிசி) தலைவர் ஜான் என்கென்சாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நைஜீரியா சி.டி.சி மற்றும் அந்த […]
நைஜீரியாவில் நாட்டில் உள்ள மலைக்காட்டு பகுதியில் சிக்கிய அரியவகை கொரில்லாக்கள் தனது குழந்தைகளை தூக்கி செல்லும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குரங்குகளில் மனிதனை போல் செயல்படும் குரங்கு வகையில் கொரில்லா குரங்கு ஒரு வகை, இந்த கொரில்லா குரங்கு அளித்து கொண்டே தான் வருகிறது, மேலும் இவ்வாறு அழிந்து வரும் நிலையில் நைஜீரியா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பிரதேசத்தில் சுமார் 300 கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) தெரிவித்துள்ளது. […]
நைஜீரியாவில் பிறந்து நான்கு மாதமேயான குழந்தை தனது திறமையால் கோடீஸ்வரராக மாறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நைஜீரியாவில் எழுத்தாளர், சமூக ஊடக நிபுணர், தொழிலதிபர் என பல துறைகளில் சிறந்து விளங்குபவர் லவுராய்கிஜி. இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு லவுரல் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த நான்கு மாத குழந்தை தனது திறமையால் கோடீஸ்வரராக மாறி உள்ளதாக தாயான லவுராய்கிஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் பிரபலமாகிய தனது மகள் தூதர் […]
லடாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவிவருகிறது. அந்த புகைப்படம், நைஜீரிய வீரர்களின் புகைப்படம் என தெரியவந்துள்ளது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் முதலாவதாக ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக […]
நைஜீரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 89 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இந்த நாட்டில் ஐஸ் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் மக்கள் மீதும்,பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் அங்கு உள்ள சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் பதுங்கி […]
நைஜீரியா, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகும். போகோஹரம், ஐ.எஸ், உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் அங்குள்ள மக்களை துன்புறுத்தி பணம், பொருள் ஆகியவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். இதில் முக்கியமான பன்டிட்ஸ் என்ற கொள்ளை கும்பலை நைஜீரியா பாதுகாப்பு படையினர் அழிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சுர்மி நகரின் ஹடரின் டஜி பகுதியில் தங்கியிருந்த பன்டிட்ஸ் கொள்ளை கும்பலை நைஜீரியா பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தி 21 கொள்ளையர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதலில் 4 […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு நைஜீரிய அதிபரின் உதவியாளர் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புகாரி பதவி வகித்து வருகிறார்.மல்லம் அப்பா கியாரி என்பவர் அதிபர் புகாரியின் உதவியாளராக இருந்து வந்தவர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் .மல்லம் அப்பா கியாரிக்கு தாக்கியுள்ளது.இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .ஆனால் அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தது.இதன்விளைவாக அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துவிட்டார்.இவரது மறைவிற்கு அதிபர் முகமது […]