நைஜீரியாவில் பிளாட்டியூ மாநிலம் உள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் இருவேறு கும்பல்களிடையே நடந்த மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னும் தெளிவாக தெரியவில்லை என ராணுவ கேப்டன் ஓயா ஜேம்ஸ் தெரிவித்தார். இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டு அடிக்கடி சண்டைகள் நடைபெறும். கடந்த மே மாதம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 100 […]
நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி கூறினார். அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி. இன்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் அயல்நாட்டு தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்க்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் […]
குரங்கு அம்மை நோய்க்கு நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. […]
நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்துள்ளதாகவும்,ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமா உள்ளூர் பகுதியில் உள்ள […]
நைஜீரியாவில் உள்ள வடமேற்கு மாநிலமாகிய சோகோடோ எனும் பகுதியில் உள்ள ஆற்றில் மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சொகோடோ பகுதியின் அலியு தண்டனி எனும் அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் எனவும், அவர்கள் பக்கத்தில் உள்ள பதியவா எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் […]
நைஜீரியா அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாவட்டத்தில் மாகாணத்தில் 21 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது.இந்த கட்டிட பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு […]
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கிராம மக்கள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கடுனா பகுதி கவுரா நகரில் உள்ள மடமய் எனும் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலின் பொழுது இந்த மர்ம நபர்கள் சில வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர். இது குறித்து அரசு படையினருக்கு […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக […]