குளியலறை முதல் படுக்கையறை வரை 24 கேரட் தங்கம்.! மதிப்பு 200 மில்லியன் டாலர்.!

The first fully gold plated hostel in the world in Vietnam. The value of the hotel is said to be $ 200 million.

வியட்நாம் நாட்டில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

வியட்நாமின் ஹனோய் மத்திய மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ள, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட தங்கும் விடுதி. குளியலறை முதல் படுக்கையறை வரை அனைத்தும் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர்  என்றும் கூறப்படுகிறது.

டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட பின்னர் உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று இணையத்தில் வைரலாகியது. அந்நேரத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் விருந்தினர்களை மிகவும் விலையுயர்ந்த சுவைகளுடன் கவர்ந்தது தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள், கழிப்பறைகள் என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது.

ஊரடகிற்கு பிறகு சுற்றுலா தளம் மீண்டும் திறக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்களை வியட்நாமிற்கு மீண்டும் அழைத்து வர ஹோட்டல் நிர்வாகம் கூடுதல் முயற்சி செய்தது. ஹோட்டல் வசதிகளில் கூரையின் மேல் 24 காரட் தங்க-டைல்ட் உள்ளது. ஒரு இரவு 250 டாலர் (R3 800) முதல் உள்ளது. உணவிலும் “மர்மமான தங்கப் பொருளுடன்” வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலின் காபி கோப்பைகள் கூட 24 காரட் தங்கத்தால் ஆனவை.