கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,335 பேர் உயிரிழப்பு!

In the last 24 hours alone, 2,355 people have died from corona due to the current outbreak of the corona virus in Brazil.

பிரேசிலில் தற்பொழுது ஒரு மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பெரும் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் அதிக அளவில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் காணப்படுகிறது.  பிரேசில் உயிரிழப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில வாரங்களாக பிரேசிலில் தொற்று பரவல் மிக அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசில் 74,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,335 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.