தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை பலரும் இந்நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்கள் தலை நிமிரவும் தமிழக உரிமைக்காக தன்னை அர்ப்பணிக்கவும் செய்த தனிப்பெரும் தலைவர் ஏழைகள் ஏற்றம் பெறவும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவும் அவர் விரும்பினார். அப்பெரும் தலைவரின் விருப்பத்தை நம் கடமையாக கொண்டு உழைப்போம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node