சென்னை மருத்துவமனையில் 118 ஊழியர்களுக்கு கொரோனா.! மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரையில் செயல்பட தடை.!

சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மறு உத்தரவு

சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் மருத்துவமனையை செயல்படுத்த கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், தலைநகர் சென்னை கொரோனா பாதிப்பில் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

unknown node

மேலும், அந்த மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 118 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், விஜயா மருத்துவமனையின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் மருத்துவமனை செயல்பட கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவு விஜயா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரத்ரெட்டி, மற்றும் 52 வயதான ஊழியரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.