சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த மருத்துவர்கள், ஊழியர்கள் உட்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் மருத்துவமனையை செயல்படுத்த கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், தலைநகர் சென்னை கொரோனா பாதிப்பில் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் வேலை பார்த்துவந்த […]