கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் வசந்த குமார் எம்.பிக்கு தீவிர சிகிசக அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலையும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை விரைவில் வீடு திரும்புவார் என்று விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.