நாடு முழுவதும் 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சொந்த தொகுதியான போடியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் நிரந்திர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே நெல்லையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node