#BREAKING: வரும் 14ம் தேதி அதிமுக ஆலோசனை – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு.!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான வரும் 14-ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் வரும் 14- ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வரப்போகின்ற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக என்னென்ன பணிகளை செய்ய … Read more

துணை முதல்வர் நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு – முறையாக அனுமதி தர அறிவுறுத்தல்!

நகர ஊரமைப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி தரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நகர ஊரமைப்புத் துறை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்டடங்களுக்கு உரிய வகையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நிலங்களை வகைப்படுத்துதல் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட … Read more

அடுத்த முதல்வர் ஓபிஎஸ்.! போடி முழுவதும் போஸ்டர்.!

நாடு முழுவதும் 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சொந்த தொகுதியான போடியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் நிரந்திர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே நெல்லையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக … Read more

சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறிய துணை முதல்வர்.!

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் – துணை முதல்வர் பன்னீர் செல்வம். நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஒ.பன்னிர் செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

104ஐ அழுத்துங்கள்-துணைமுதல்வர் அழைப்பு!

உலகளவில் கொரோனா தொற்று 97 லட்சத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்களில் பலர் மன உளைச்சல், அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக தற்கொலை உயிரிழப்புகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகிறது இந்நிலையில் இது குறித்து துணைமுதல்வர் பன்னீர் செல்வம்  கூறியுள்ளதாவது: கொரோனா அச்சமோ, மனஅழுத்தமோ இருந்தால் அரசு உதவி எண் 104-ஐ அழைக்கவும். மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள்  உங்களது மனஅழுத்தத்தை போக்க உதவுவார்கள் என்று … Read more

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி.!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்து மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 12 மணியளவில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார். 

இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக ஆட்சி.!

அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு ஆட்சி நிறைவுபெற்று, இன்று முதல் 5-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், அரசின் சாதனைகளை முதலமைச்சர் பழனிசாமி நேற்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம்‌ இதயத்தில்‌ என்றும்‌ வாழும்‌ பாசமிகு தாய்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ தொடர்‌ வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின்‌, நான்காம்‌ ஆண்டு நிறைவுற்று … Read more

நேற்றும், இன்றும், நாளையும் அதிமுக அரசே தொடரும் – ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  நேற்று, இன்றும், நாளையும் அதிமுக ஆட்சியே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்ய உழைப்போம் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக அரசின் ஐந்தாம் ஆண்டு ஆட்சி நாளை தொடங்குவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் பணியாற்றி வருகிறது அதிமுக அரசு என்று … Read more

ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து – அதிமுக அதிரடி அறிவிப்பு

அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அதிமுக அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றிய அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர், துணை நிர்வாகப் பொறுப்புகள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை, … Read more

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் – சசிகலாவின் மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக கட்சியில் பல்வேறு சலசலப்பு மற்றும் பிளவுகள் ஏற்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என சிக்கல் எழுந்தது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் கடந்த 2017 ஆம் இரட்டை இலை சின்னம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் … Read more